×
 

பக்தர்களே கவனிங்க..!! செல்போன்களுக்கு தடை... 52 கோவில்களில் அதிரடி நடவடிக்கை..!!

52 பெரிய கோவில்களில் செல்போன் கொண்டுச் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் முக்கிய திருக்கோயில்களில் இன்று முதல் செல்போன்கள் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் உள்ளிட்ட 52 முதுநிலைத் திருக்கோயில்களில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

கோயில்களின் புனிதத் தன்மையையும் ஆன்மீகச் சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் மூலம் இறைவனின் திருவுருவங்களைப் புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு செய்தல், செல்பி எடுத்தல் மற்றும் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவேற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பிற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு கோயில்களின் புனிதமும் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் வந்தன. வரிசையில் நின்று காத்திருக்கும்போது செல்போனில் இசை கேட்டல், விளையாட்டு விளையாடுதல் அல்லது உரையாடுதல் ஆகியவை மற்றவர்களின் வழிபாட்டைத் தொந்தரவு செய்வதாகவும் கருதப்பட்டது.

இதனால் பக்தர்கள் முழுமையாக இறைவனைத் தியானித்து அமைதியாகத் தரிசனம் செய்யும் வாய்ப்பை உருவாக்க இந்தத் தடை கொண்டு வரப்பட்டுள்ளது. கூட்ட மேலாண்மைக்கும் இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லாததால், பக்தர்கள் தங்கள் கைபேசிகளைப் பாதுகாப்பாக ஒப்படைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலின் நுழைவு வாயில்கள், கோபுர வாசல்கள் மற்றும் காலணி பாதுகாப்பு மையங்களுக்கு அருகில் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செல்போனுக்கும் ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு ரசீது அல்லது டோக்கன் வழங்கப்படும்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை கோயிலில் செப். 1 முதல் செல்போன்களுக்கு தடை... அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக அறிவிப்பு.!

தரிசனம் முடிந்ததும் அந்த ரசீதின் அடிப்படையில் கைபேசியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். சில கோயில்களில் முக அங்கீகார அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்களின் முகத்தை ஸ்கேன் செய்து விவரங்களுடன் ரசீது வழங்கப்படுகிறது. இதனால் கைபேசியைத் திரும்பப் பெறும்போது குழப்பம் ஏற்படாது. ஸ்ரீரங்கம் கோயிலில் மூன்று முக்கிய கோபுர வாசல்களிலும் சிறப்புக் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூவாயிரம் பெட்டகங்களில் ஒரே நேரத்தில் பதினைந்தாயிரம் செல்போன்கள் வரை பாதுகாக்கும் வசதி உள்ளது. திருவண்ணாமலையில் நான்கு பிரதான கோபுரங்களுக்கு அருகே பெட்டகங்கள் தயார் நிலையில் உள்ளன. திருப்பரங்குன்றம் மற்றும் பிற கோயில்களிலும் காலணி காப்பக அருகே இதேபோன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

 

 

இதையும் படிங்க: அனல்மின் திட்ட அறிவிப்பு தேவையா.? தனியாருக்கு விற்க போறீங்களா.? முதல்வருக்கு அப்பாவு கேள்வி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share