×
 

டெல்டா மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு... ஆனா பிளான் மாறிடுச்சு...!

டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்யும் மத்திய குழுவின் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உணவு கொள்கலனாக அறியப்படும் காவிரி டெல்டா பகுதி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் ஆழமான சோகத்தை சந்தித்துள்ளது. அக்டோபர் 16-ஆம் தேதி இயல்பை விட நான்கு நாட்கள் முன்கூட்டியே தொடங்கிய இந்த மழைப்பொழிவு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் புயல் வேகத்தில் பெய்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் தண்ணீரில் மூழ்கியது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் காட்டி வருகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டதுடன் விவசாய நிலங்கள் சேதம் மற்றும் போக்குவரத்து குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. தொடர் கனமழையால் விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர். விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் நீரில் மூழ்கின. குருவை நெல் மணிகள் உள்ளிட்டவை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் விவசாயிகளுக்கு பயிர் சேதம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் வாழ்வாதாரத்தை பெரும் அளவு பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என எதிர் கட்சி தலைவர் உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல் மூட்டைகள் தேங்கி கெடக்குதுய்யா... EPS- யிடம் வேதனையைக் கொட்டி தீர்த்த விவசாயிகள்...!

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மத்திய குழு இன்று ஆய்வுக்கு வரை இருந்தது. இந்த நிலையில் மத்திய குழு நாமக்கல்லுக்கு செல்ல இருப்பதால் நாளை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆய்வுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசி ஆலையை ஆய்வு செய்வதற்காக நாமக்கல்லுக்கு ஒரு குழுவும், கோவை மாவட்டத்திற்கு ஒரு குழுவும் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கடனில் டெல்டா விவசாயிகள்… கருணை காட்டுங்க! நிவாரணம் வழங்க பிரேமலதா வலியுறுத்தல்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share