கடனில் டெல்டா விவசாயிகள்… கருணை காட்டுங்க! நிவாரணம் வழங்க பிரேமலதா வலியுறுத்தல்…!
டெல்டா விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டின் உணவு கொள்கலனாக அறியப்படும் காவிரி டெல்டா பகுதி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் ஆழமான சோகத்தை சந்தித்துள்ளது. அக்டோபர் 16-ஆம் தேதி இயல்பை விட நான்கு நாட்கள் முன்கூட்டியே தொடங்கிய இந்த மழைப்பொழிவு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் புயல் வேகத்தில் பெய்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் தண்ணீரில் மூழ்கியது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் காட்டி வருகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டதுடன் விவசாய நிலங்கள் சேதம் மற்றும் போக்குவரத்து குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. தொடர் கனமழையால் விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர். விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் நீரில் மூழ்கின. குருவை நெல் மணிகள் உள்ளிட்டவை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் விவசாயிகளுக்கு பயிர் சேதம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் வாழ்வாதாரத்தை பெரும் அளவு பாதித்துள்ளது. இதனிடையே, ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் மழை நீரை மூழ்கிய நிலையில் டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: டெல்டா விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி! தீயசக்தி திமுக... விளாசிய இபிஎஸ்...!
தொடர் கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கிய நிலையில் விவசாயிகள் கடனில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே போர்கால அடிப்படையில் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறீங்களே ஸ்டாலின்... நயினார் நாகேந்திரன் ஆவேசம்...!