×
 

100 நாள் வேலைத் திட்டத்தை சிதைக்க பார்க்கிறது மத்திய அரசு! அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்! 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசின் முயற்சி ஒருபோதும் பலிக்காது என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட லட்சுமணன்பட்டி, ஏ.டி. காலனி, அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய கட்டடங்கள் மற்றும் மேம்பாலங்களைத் திறந்து வைத்த அமைச்சர் ஐ. பெரியசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "மத்திய பாஜக அரசு மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தை முடக்கப் பார்க்கிறது. அவர்கள் வேலை நாட்களைக் குறைக்கலாம், ஆனால் தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நிகராக யாராலும் கால்பதிக்க முடியாது" எனச் சாடினார். அதிமுக உட்கட்சிப் பூசல் குறித்துக் கருத்து தெரிவித்த அவர், எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்தவர் என்று விமர்சித்தார்.

தொடர்ந்து செவிலியர்களின் கோரிக்கை குறித்துப் பேசிய அமைச்சர், செவிலியர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். முன்னதாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் மற்றும் புதிய பணியிடங்கள் மூலம் முதற்கட்டமாகச் சுமார் 1,000 ஒப்பந்த செவிலியர்கள் விரைவில் நிரந்தரப் பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு வழங்கிய ஊதியத்தை முறைப்படி வழங்கியது கருணாநிதி ஆட்சிதான் என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய ஆட்சியிலும் செவிலியர்களின் நலன் காக்கப்படும் என உறுதி அளித்தார். தற்போது ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கவும், விடுபட்ட 724 கொரோனா காலச் செவிலியர்களுக்குப் பணி நியமனம் வழங்கவும் அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது. அரசின் இந்தத் திட்டவட்டமான உறுதிமொழிகளை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: “விஜய் முதல்ல களத்துக்கு வரட்டும்!” – எங்களுக்கு கவலையே இல்ல: அமைச்சர் ஐ.பெரியசாமி சவால்


 

இதையும் படிங்க: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனப் பரிந்துரைக்கு தடை கோரி வழக்கு: கொலீஜியம் மீது புகார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share