×
 

#Breaking: கோடை வெப்பத்தால் முன்கூட்டியே கோடை விடுமுறை: முழு ஆண்டு தேதியில் மாற்றம்..!

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை, ஏப்ரல்-7 முதல் 17ம் தேதி வரை இறுதி தேர்வு நடைபெறும். 
கோடை வெப்பத்தின் தாக்கத்தால் முன்கூட்டியே இறுதித்தேர்வு நடைபெற்று விடுமுறை விடப்படும் என  தொடக்கக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.  

இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும்'' என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை 
வகுப்பு:1-5 
நாள் & கிழமை 
வகுப்பு -1 
நேரம் 10.00-12.00 


வகுப்பு -2 வகுப்பு -
நேரம் 10.00-12.00 


வகுப்பு -3 
நேரம் 10.00-12.00 

வகுப்பு - 4 

 நேரம் 02.00- 04.00


வகுப்பு - 5 
நேரம் 02.00-04.00 

இதையும் படிங்க: திமுகவின் காப்பி... தெளிவில்லாத விஜய்... தெறிக்கவிடும் தமிழிசை..!

07.04.2025 திங்கள் 
தமிழ் 
 

08.04.2025 செவ்வாய் 
விருப்ப மொழி 
 

09.04.2025 புதன் 
ஆங்கிலம் 

11.04.2025 வெள்ளி 
கணக்கு 

15.04.2025 செவ்வாய் 
அறிவியல் 

17.04.2025 வியாழன் 
சமூக அறிவியல்

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழலில் முன்கூட்டியே தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோடை விடுமுறையும் முன்கூட்டியே தொடங்குகிறது.
 

இதையும் படிங்க: துணை முதலமைச்சர் பி.ஏ எனக் கூறி பெண் மோசடி.. அதிரடி காட்டிய போலீசார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share