இத்தனை சென்டி மீட்டரா?... சென்னையை உக்கிரமாக தாக்கிய கனமழை... விடிய, விடிய கொட்டித்தீர்த்த அளவு இதோ...!
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
115.6 மில்லிமீட்டர் முதல் 204.4 மில்லிமீட்டர் வரை மழை பதிவானால், அது மிக கனமழையாகக் கருதப்படுகிறது. அந்த அடிப்படையில், சென்னைக்கு நேற்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மாலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழைப்பொழிவு காணப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவுக்குப் பிறகும் மழை பெய்தது.
நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரையிலான காலகட்டத்தில், சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை... சென்னையின் தற்போதைய நிலவரம் என்ன? - மாநகராட்சி ஆணையர் சமீரன் சொன்ன முக்கிய தகவல்...!
ஏற்கெனவே, கடந்த 17ஆம் தேதி வடசென்னையின் பாரிமுனை, கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 20 முதல் 25 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியிருந்தது. இந்நிலையில், நேற்று மீனம்பாக்கம் பகுதியில் மொத்தம் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, காரைக்கால், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இருப்பினும், சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாகச் சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்றும் சென்னையில் மழைப்பொழிவு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும், மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், நள்ளிரவு நேரங்களிலும் மாநகராட்சி அதிகாரிகளும், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்களும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மழைநீர் தேங்காமல் இருப்பதற்கும், பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வரும் நேரங்களிலும் சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING சென்னை மக்களே இனி தான் ஆட்டம் ஆரம்பம்... வேலைக்கு போறவங்க மறக்காமல் குடையை எடுத்துக்கோங்க...!