×
 
☰

#BREAKING சென்னை மக்களே இனி தான் ஆட்டம் ஆரம்பம்... வேலைக்கு போறவங்க மறக்காமல் குடையை எடுத்துக்கோங்க...!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பெய்துள்ளது.

சென்னையில் இன்று (அக்டோபர் 21) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், 19 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தின் சில மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடக்கு கடலோர ஆந்திரப் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நிலவுகிறது.

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

  • தூத்துக்குடி

  • திருநெல்வேலி

  • கன்னியாகுமரி

கனமழைக்கு வாய்ப்புள்ள 19 மாவட்டங்கள்:

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற தமிழகப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை... இந்த 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

இரவு முழுவதும் கொட்டிய மழை:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பெய்துள்ளது. இதனால் வட தமிழகத்தின் பல பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையின் வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இன்று காலை 10 மணி வரை நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை பெய்யும் பகுதிகளில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கினால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: 14 மாவட்டங்களுக்கு குறி... இன்று தரமான சம்பவம் செய்யப் போகும் மழை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share