×
 

சிறுமியின் கழுத்தில் கத்தரிக்கோலை வைத்து மிரட்டிய அதிர்ச்சி சம்பவம்... பதறிய நோயாளிகள்!

அரசு மருத்துவமனையில் சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபரால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

பவுஞ்சூர் அரசு மருத்துவமனையில் சிறுமியின் கழுத்தில் மணிகண்டன் என்ற நபர் கத்தரிக்கோலை வைத்து அனைவரையும் மிரட்டிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மிரட்டியவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என விசாரிக்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் 2020 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது, இதில் 3 வருவாய் கோட்டங்கள் (செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம்), 8 தாலுகாக்கள் (செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் போன்றவை) உள்ளன. பவுஞ்சூர் இந்த மாவட்டத்தின் கிராமப்புற சுகாதார வலையமைப்பின் ஒரு பகுதி. செங்கல்பட்டு மாவட்டத்தில் பவுஞ்சூர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 

இந்த மருத்துவமனையில் மணிகண்டன் என்பவர் ஒரு சிறுமியின் கழுத்தில் கத்தரிக்கோல் வைத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணிகண்டன் என்பவர் மேல கண்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசி என்பவரது மகளை பிடித்துக் கொண்டு கழுத்தில் கத்தரிக்கோலை வைத்து மிரட்டி உள்ளார். இதனைப் பார்த்து பதறிய நோயாளிகள் சிறுமியை மிக்க முயற்சித்தனர். அப்போது அருகில் வந்தால் சிறுமியின் கழுத்தில் குத்தி விடுவேன் எனக்கூறி மணிகண்டன் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். இதனால் செய்வதறியாது பதறிப்போன குழந்தையின் தாய் மற்றும் அருகில் இருந்தவர்கள் மணிகண்டனை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர்.

இதையும் படிங்க: இபிஎஸ் ஆம்புலன்ஸ்ல போவாரு சொன்னேனா? ஆதங்கத்தை கொட்டிய உதயநிதி…

தொடர்ந்து போலீசாரக்க தகவல் கொடுக்கப்பட்டது. சிறுமையின் கழுத்தில் கத்தரிக்கோலை வைத்து மிரட்டிய மணிகண்டன் மனநலம் பாதிக்கப்பட்டவரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரச மருத்துவமனையில் சிறுமியின் கழுத்தில் கத்தரிக்கோலை வைத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வீல் சேர் கொடுக்கல.. கோவை அரசு மருத்துவமனையில் 2 மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share