×
 

இபிஎஸ் ஆம்புலன்ஸ்ல போவாரு சொன்னேனா? ஆதங்கத்தை கொட்டிய உதயநிதி…

அதிமுக ஆம்புலன்ஸ் செல்லும் நிலையில் உள்ளதாக தான் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

இபிஎஸ் ஆம்புலன்ஸில் செல்வார் என்று தான் கூறவில்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் .

அப்போது பேசிய அவர், அதிமுக ஆம்புலன்சில் செல்லும் நிலையில் உள்ளதாகவே தான் பேசியதாகவும் மிகவும் வன்மத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். எந்த கட்சித் தலைவர் கூட்டம் போட்டாலும் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் செல்லும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்சில் செல்வார் என தான் கூறவில்லை எனவும் மனிதாபிமானம் உடைய மனிதன் யாராவது அப்படி பேசுவாரா என்றும் கேள்வி எழுப்பினார். தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பேசியதற்கு துணை முதலமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். அதிமுக ஆம்புலன்சி செல்லும் நிலை இருப்பதாகவும் அதை காப்பாற்ற முதல்வர் வருவார் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடர வேண்டும் என்றும் அதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது எனவும் அப்போதுதான் திமுகவின் வெற்றி எளிதாகும் என்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசினார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தொடர்வதே தமிழ்நாட்டிற்கு அவர் செய்யக்கூடிய ஒரே நல்ல காரியம் என்றும் அதிமுகவில் கடந்த சில மாதங்களில் 2,3 அணிகள் உருவாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல்னு வந்துட்டா திமுக-காரங்கள அடிச்சுக்க ஆளே இல்ல! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

ஓபிஎஸ் அணியா, இபிஎஸ் அணியா, டிடிவி அணியா, சசிகலா அணியா, செங்கோட்டையன் அணியா, தீபா அணியா என்று தெரியாமல் அதிமுகவினர் குழம்பி வருவதாகவும் ஆனால் அனைவரும் பாஜக என்ற ஒற்றை அணிக்கு வந்து விட்டோம் என்பதை உணர்ந்துவிட்டதாகவும் கூறி விமர்சித்தார். 

இதையும் படிங்க: ELECTION தான் TARGET! "ஓய்வு" என்பதையே மறந்து விடுங்கள்... திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share