#Breaking வெளுத்து வாங்கும் கனமழை... நாளை இந்த 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பொதுவாக வடக்கு திசையில் நகர்ந்து, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது. அதே பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு - தென்கிழக்கே சுமார் 190 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
அப்பொழுது, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து வடதமிழக - புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 25 கிலோ மீட்டராக உள்ளது.
இது தென்மேற்கு திசையில் மெதுவாக வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்திற்கு பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆற்றலுக்கு தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காலை முதலே சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஸ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது... அடுத்த 12 மணி நேரத்தில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்...!