#BREAKING காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது... அடுத்த 12 மணி நேரத்தில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்...!
சென்னை அருகே கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
சென்னைக்கு அருகில் 35 கிலோமீட்டர் தொலைவில் ஒரே இடத்தில் கடந்த 6 மணி நேரமாக மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. வலுவிழுந்த டிட்வா புயல் மெதுவாக நகர்வதால் சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 12 மணி நேரத்தில் அதன் தீவிர தன்மையை தக்க வைத்துக்கொண்டு கடற்கரையை நோக்கி நகர்ந்து, அதன் பின்னர் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தாலும், கிட்டத்தட்ட 2 தினங்களுக்கு மையம் கொண்டிருந்ததால் வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் அது மேலும் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து... அடுத்த 2 நாட்களுக்கு இப்படித்தான்... பிரதீப் ஜான் எச்சரிக்கை...!
தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதால், இன்றைய தினம் சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடக்கொடுமையே...!! தனித்தீவாக மாறிய ராமேஸ்வரம்... இடுப்பளவுக்கு தேங்கிய மழைநீர்... படகுகளை பயன்படுத்தும் மக்கள்...!