சென்னை வெறும் ஊரல்ல... தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!
வந்தாரை வாழவைக்கும் சிங்காரச் சென்னைக்கு இன்று 386வது பிறந்தநாள்
தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் மிக முக்கியமான பெருநகரங்களில் ஒன்றுமான சென்னை மாநகரம் தனது 386-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று புகழப்படும் சென்னை , கலாசாரம், வரலாறு, வணிகம், கல்வி மற்றும் பொழுதுபோக்கின் மையமாக விளங்கி, இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் பளபளக்கும் ஒரு மாணிக்கமாகத் திகழ்கிறது.
1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் இந்த நகரம் உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், 2004 முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் சென்னை தினம் எனக் கொண்டாடப்படுகிறது. சென்னையின் கலாசாரப் பன்முகத்தன்மை இதன் மற்றொரு சிறப்பு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு ஒன்றிணைந்து வாழ்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மற்றும் பிற மொழிகளைப் பேசுபவர்கள் ஒற்றுமையுடன் வாழும் இந்த நகரம், வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பண்பை பிரதிபலிக்கிறது. சென்னை தினத்தை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: உங்க விஜய் நான் வரேன்.. 2026 நம்ம தான்! தொண்டர்கள் மத்தியில் விஜய் அனல் தெறிக்கும் பேச்சு..!
எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386 என தெரிவித்தார். சென்னை வெறும் ஊரல்ல என்றும் தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு எனவும் கூறினார். வணக்கம் வாழவைக்கும் சென்னை என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: STALIN UNCLE… Its Wrong uncle! மதுரை மாநாட்டில் முதல்வரை விளாசிய விஜய்..!