×
 
☰

சென்னையை உலுக்கும் டெங்கு காய்ச்சல் பரவல்... இந்த ஏரியாவில் மட்டும் இத்தனை பேருக்கு பாதிப்பா?... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

பூந்தமல்லி நகராட்சியில் 4 வயது சிறுவன் உட்பட 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பூந்தமல்லி நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், தற்போது 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 வயது சிறுவன் மற்றும் 20 வயது இளம்பெண் உள்ளிட்ட 8 பேர் அடங்குவர்.

இவர்களில் 4 பேர் தனியார் மருத்துவமனையிலும், 4 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சிலர் தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை, பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் அதனை முறையாக செயல்படுத்தவில்லை என்றும், மெத்தனமாக செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவு: சுகாதார செயலாளர் தாரேஸ் அகமது பேட்டி!

இதன் காரணமாகவே தற்போது இந்தப் பகுதியில் காய்ச்சல், குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பூந்தமல்லி நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதையும், அதில் கொசுக்கள் உற்பத்தியாவதையும் நேரடியாக பார்க்க முடிகிறது. பொது இடங்களில் மட்டுமல்லாமல், பூந்தமல்லி நகராட்சி வளாகத்திலேயே இதுபோன்று தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனம் காரணமாகவே தற்போது டெங்கு காய்ச்சல் பரவி, 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், காய்ச்சல் தொடர்ந்து பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதால், உடனடியாக கொசு உற்பத்தியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share