×
 
இரவில் ஒரு குடும்பத்துக்கு நடந்த பயங்கரம்.. துடிதுடித்து போன உயிர்கள் - சென்னையில் அதிர்ச்சி...!

சென்னையில் கடந்த வாரம் வீட்டில் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் படு காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த வாரம் வீட்டில் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் படு காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோவிலம் பாக்கத்தில் காந்திநகர் 15வது தெருவில் வசித்து வந்தவர் முனுசாமி. இவருடைய குடும்பத்தினர் ஐந்து பேருமே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது கேஸ் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் கேஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி நிலையில், இதனை அறியாமல் ரகு என்பவர் மின்சார சுவிட்ச்சை ஆன்  செய்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது சிறிது நேரத்தில் அறை முழுவதும் திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியிருக்கிறது. இந்த விபத்தில் முனுசாமி, ராணி, சாந்தி, ஹரிஹரன் என்கிற அஜித், ரகு ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்போது உயிரிழந்திருக்கிறார்கள். 

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 உயிரைக் காவு வாங்கிய கேஸ்...! சென்னையில் அரங்கேறிய பயங்கரம்...! 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முனுசாமி, சாந்தி, ஹரிஹரன் ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்திருக்கிற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
மருத்துவமனையில் கிட்டத்தட்ட 40 சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் நான்கு பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கோவிலம்பாக்கம் போலீசார் விசாரணை செய்த நிலையில், சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் மற்றும்  தடவியல் துறை உதவி
இயக்குனர் ஜெயந்தி ஆகியோர் ஆய்வு நடத்தினர். 

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 உயிரைக் காவு வாங்கிய கேஸ்...! சென்னையில் அரங்கேறிய பயங்கரம்...! 

Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share