#BREAKING இனி இளையராஜா படங்களை பயன்படுத்தக் கூடாது... யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!
சமூக வலைத்தளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படங்களின் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படங்களின் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூட்யூப், ஃபேஸ்புக் , எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
தன்னை அடையாளப்படுத்தக்கூடிய வகையில் புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என பயன்படுத்தக் கூடாது எனவும், சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ள தனது புகைப்படங்களை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மேலும் அவ்வாறு பயன்படுத்திய மூலம் கிடைத்த வருமானங்கள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: தொடரும் சிக்கல்... ஹைகோர்ட்டில் இளையராஜா வழக்கு... வருமான விவரத்தை தாக்கல் செய்த சோனி நிறுவனம்...!
பல்வேறு யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்குஇன்று நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் சரவணன் ஆகியோர் ஆஜராகி, இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை ஏஐ மூலம் மார்ஃபிங் செய்து சோசியல் மீடியாக்களில் பயன்படுத்தி வருமானம் ஈட்டப்படுவதாக குற்றம் சாட்டினர். அப்போது குறிப்பிட்ட நீதிபதி செந்தில்குமார் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு வழக்கறிஞர்கள், இளையராஜாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி வருவாய் ஈட்டப்படுவதாகவும், இதனால் அவருடைய தனி உரிமை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். அதேபோல் சோசியல் மீடியாக்களில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி ரீல்ஸ் மற்றும் மீம்ஸ்கள் உருவாக்கப்படுவதாகவும், அதன் மூலம் தன்னை பற்றி அவதூறு பரப்பப்படுவதாகவும் இளையராஜா தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி செந்தில்குமார் இளையராஜாவின் அனுமதி இன்றி சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: என்ன பொய் சொன்னாலும் நடக்காது!! ஜி20 உச்சி மாநாடு!! அமெரிக்கா கறார் பதில்!