×
 

தொடரும் சிக்கல்... ஹைகோர்ட்டில் இளையராஜா வழக்கு... வருமான விவரத்தை தாக்கல் செய்த சோனி நிறுவனம்...!

சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தொடர்ந்த வழக்கில் வருமான விவரத்தை சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.

தமிழ் இசை உலகின் மாஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் இளையராஜா, தனது படைப்புகளின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக, சர்வதேச இசைப் பெரும்பாலான சோனி மியூசிக் நிறுவனத்துடனான அவரது சண்டை, காப்புரிமை சட்டங்களின் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. 

இளையராஜாவின் இசைப் பயணம், 1970களின் முதல் பகுதியில் தொடங்கி, இன்று வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரையுலகில் அழியாத முத்தாகத் திகழ்கிறது. ஆனால், அவரது பாடல்களின் காப்புரிமை உரிமை குறித்து 2020களின் தொடக்கத்தில் இருந்தே சர்ச்சைகள் எழத் தொடங்கின. 

இளையராஜா 2023-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி, சோனி மியூசிக், எக்கோ ரெகார்டிங் கம்பெனி மற்றும் ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சிவில் வழக்குத் தொடுத்தார். அனுமதியின்றி தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சட்டமன்றமும், நாடாளுமன்றமும் பல்லாங்குழி ஆடவா? என்ன சீமான் இதெல்லாம்? பாய்ந்தது FIR…!

இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இளையராஜா இசையை பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விவரத்தை சீலிட்ட கவரில் சோனி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தற்போது வெளியாகி உள்ள டியூட் என்ற திரைப்படத்தில் கூட தனது இரண்டு பாடல்கள் பயன்படுத்தி உள்ளதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு டியூட் திரைப்படம் தொடர்பாக தனி வழக்கு தொடர அனுமதித்த நீதிபதி எம். செந்தில் குமார் வழக்கு விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: ஜாமீனை ரத்து பண்ணுங்க... இல்லைனா... ஆம்ஸ்ட்ராங் மனைவி ஹைகோர்ட்டில் முறையீடு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share