தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னை, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 18 மற்றும் 19) மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த 48 மணி நேரத்திற்குத் தலைநகர் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள், தென் மற்றும் மத்திய மாவட்டங்களின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக, மேற்குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் உள்ள தாழ்வானப் பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறும், இடி மின்னல் ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள் திறந்தவெளிப் பகுதிகள் மற்றும் மரங்களின் அடியில் தஞ்சம் புகுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை!
இதையும் படிங்க: சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை! மீனவர்களுக்கு சூறாவளி காற்று எச்சரிக்கை!