அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை!
வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேசம் - மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிரமடைந்துள்ள இப் வளிமண்டலக் சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை நோக்கிச் செல்லக்கூடும். அவ்வாறு நகரும் போது இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன் தீவிர நகர்வு காரணமாகக் கடலோரப் பகுதிகள் மற்றும் வடமாநிலங்களின் பல இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிப் படகுகள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கடலோர மாவட்ட நிர்வாகங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது
இதையும் படிங்க: சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை! மீனவர்களுக்கு சூறாவளி காற்று எச்சரிக்கை!
இதையும் படிங்க: சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!