சென்னையில் மாஸ் ரெய்டு... 50 வண்டிகளில் தீயாய் புறப்பட்ட ஐ.டி. அதிகாரிகள்... எங்கு தெரியுமா?
சென்னை கிரீம்ஸ் சாலைகள் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிகாரிகள் புறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிரீம்ஸ் சாலைகள் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிகாரிகள் புறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பெரிய அளவிலான சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக இன்று காலை முதலே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கக்கூடிய வருமானவரித்துறையின் அலுவலகத்திலிருந்து கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த இடங்களுக்கு எந்தெந்த இடத்தில் சோதனை நடக்கிறதோ அங்கு அந்தந்த மண்டலங்களில் இருக்கக்கூடிய வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர். சென்னையை பொருத்தவரையிலும் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஒவ்வொரு வாகனத்திற்கும் நான்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வீதம் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் 2வது நாளாக தொடரும் ரெய்டு... சிக்கியதா முக்கிய ஆவணங்கள்?
இவர்கள் சென்னையில் இருக்கக்கூடிய ஆலந்தூர், அண்ணாநகர் அதேபோல வளசரவாகம் ஆகிய பகுதிகளை நோக்கி தற்போது காரில் சென்றுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் Go colours துணிக்கடையில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, ஈரோடு என Go colours துணிக்கடைக்குச் சொந்தமான 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதன நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: சுகுணா சிக்கன் நிறுவனத்தில் 14 மணி நேரமாக நீடிக்கும் சோதனை... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்...!