×
 

சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்... படகுகள் தயார்... உஷார் மக்களே...!

சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீவிர படுத்தப்பட்டது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டதுடன் விவசாய நிலங்கள் சேதம் மற்றும் போக்குவரத்து குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இந்த மழை தீவிரமடைந்துள்ளது, இதன் காரணமாக சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளதால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க ஆரம்பித்து உள்ளது. பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசின் சார்பில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. நீர் தேங்கும் இடங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்ள 1,436 மோட்டார் பம்புகள், 500 டிராக்டர்கள், 457 மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பாதுகாப்பா இருங்க... புழல் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம்... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை...!

மேலும், குடியிருப்பு பகுதிகளில் மழை புகுந்தால் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 210 வெள்ள நிவாரண மையம், 106 சமையல் கூடம் உள்ளிட்டவை தயார் என கூறப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கும் மக்களை மீட்க 36 மாநகராட்சி படகுகள், மீன்பிடி படகுகள் என மொத்தம் 103 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது சூழலில், கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் 32,000 பேர் களத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…! அப்போ சென்னைக்கு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share