குலை நடுங்கவிட்ட `ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்’ - சென்னையில் ஒரே இரவில் 100+ ரவுடிகளை தட்டித்தூக்கிய காவல்துறை...!
சென்னை காவல் துறையினரால் மொத்தம் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர் வந்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சென்னையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். "ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்" என்ற பெயரில் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள்.
சென்னை தாம்பரம் அருகே கடந்த 17ஆம் தேதி வந்து இரண்டு இளைஞர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில இதுவரை ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய நிலையில், இந்த இரட்டை கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாகத்தான் நடந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இரட்டை கொலை சம்பவத்தின் எதிரொலியாக சென்னையில் காவல் எல்லைக்குள்ள இருக்கக்கூடிய ரவுடிகள், போதை பொருள் விற்பனை, கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்காக “ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்” என்ற முறையை வந்து சென்னை காவல்துறை நேற்று இரவு சென்னை காவல்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதாவது சென்னையில் இருக்கக்கூடிய ரவுடிகள், போதை பொருள் விற்பனை செய்யும் நபர்கள், கட்டப் பஞ்சாயத்து செய்யும் ரவுடிகள் ஆகியோரை வந்து கண்காணித்து கைசென்னை காவல் துறையினர் தீவிரமாக கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் தான் நேற்று இரவு ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ் நடவடிக்கையானது ஆரம்பிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், இதுவரை சென்னை காவல் துறையினரால் மொத்தம் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர் வந்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!
தி.நகர் காவலல் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 18 நபர்கள், அதேபோன்று அடையாறு காவல் மாவட்டத்தில 16 நபர்கள், புளியாந்தோப்பு காவல் மாவட்டத்தில 20 நபர்கள், அண்ணாநகரில 10 நபர்கள், மயிலாப்பூர்ல 12 நபர்கள் என சென்னை முழுவதும் தற்போது வரை 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் வந்து கைது செய்யப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களைப் போன்ற சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள், போதைப் பொருள் விற்பவர்கள், கட்டபஞ்சாயத்து ரவுடிகள் என சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரக்கூடியவர்கள் மீது ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ் ஆனது தொடரும் எனவும் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திடீரென நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த ஸ்பெஷல் டிரைவ் ஆனது சென்னை முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: "நீட் குளறுபடி"... வெடித்தது போராட்டம்..! இந்திய மாணவர் காங்கிரசார் குண்டுகட்டாக கைது..!