×
 

"நீட் குளறுபடி"... வெடித்தது போராட்டம்..! இந்திய மாணவர் காங்கிரசார் குண்டுகட்டாக கைது..!

நீட் குளறுபடிகளை கண்டித்து போராடிய இந்திய மாணவர் காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

நீட் என்பது National Eligibility cum Entrance Test என்று அழைக்கப்படும் இந்தியாவின் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். இது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ அமைப்புகளின் MBBS, BDS, BAMS, BHMS, BUMS உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கான ஒரே தகுதித் தேர்வு ஆகும். தேசிய தேர்வு முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. இதற்கு முன்பு AIPMT என்று அழைக்கப்பட்ட இந்தத் தேர்வு, 2013 முதல் NEET எனப் பெயர் மாற்றம் பெற்று, 2019 முதல் NTA மூலம் முழுமையாக நடத்தப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS உள்ளிட்ட படிப்புகளுக்கு அனுமதி பெற இந்தத் தேர்வு கட்டாயமாகும்.நீட் தேர்வு ஒரு ஒற்றை நாளில், ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நடைபெறும் OMR முறையிலான தேர்வு ஆகும். இது 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தமிழில் தேர்வு எழுதும் வசதியும் உள்ளது. இந்தத் தேர்வின் முக்கிய நோக்கம், மருத்துவக் கல்வியில் தரத்தை உறுதி செய்வதும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதும் ஆகும். முன்பு மாநில அளவில் தனித்தனியே நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகள் இப்போது NEET மூலம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான NEET UG 2026 கடந்த மே மூன்றாம் தேதி நடைபெற்ற முடிந்தது. ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வு நடந்து முடிந்த நிலையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சத்தியமூர்த்தி பவனில் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு கொடுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!

இந்த நிலையில், நீட் குளறுபடிகளை கண்டித்து இந்திய மாணவர் காங்கிரசார் போராட்டம் நடத்தி இருந்தனர். சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட இந்திய மாணவர் காங்கிரசார் முயன்று உள்ளனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரது சட்டைகள் கிழிக்கப்பட்டன. இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. 

இதையும் படிங்க: தவெக தரும் அமைச்சர் பதவி யாருக்கு? தமிழக காங்., எம்.எல்.ஏ-க்கள் குஸ்தி சண்டை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share