×
 

#JUSTIN சென்னையில் அதிரடி... பிரபல ரவுடி ‘திக்குவாய்’ சுதாகர் துப்பாக்கி முனையில் கைது..!

37 குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்து பிரபல ரடிவுயை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி திக்குவாய் சுதாகரை, அதிதீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அரும்பாக்கம் ராதா என்ற ராதாகிருஷ்ணன், சிறையில் இருந்தபடியே வெளியில் கூலிப்படையினரை பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து, வெளியில் இருந்து இந்த குற்றச் செயல்களை முன்னெடுத்து வருபவர் யார் என்பது குறித்து அதிதீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, திக்குவாய் சுதாகர் தான் இந்த நடவடிக்கைகளில் முக்கியமாக ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சுதாகர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 37 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க: "உடலை வாங்க முடியாது"...! நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்... கொந்தளிக்கும் குடும்பம்..!!

அவற்றில் 6 வழக்குகளின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால், அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, அதிதீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, பாரிவாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த சுதாகரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பின்னர், மேல் நடவடிக்கைக்காக அவரை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் மூலம், நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், அவர் யாரிடமெல்லாம் மிரட்டி பணம் பறித்துள்ளார், வேறு எந்தெந்த வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் மாலை நேரத்தில் வெளியிடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

இதையும் படிங்க: 65+ மூத்த குடிமக்களே கவனம்..!! திருப்பதி தரிசன விதிகளில் புதிய அப்டேட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share