நடுவானில் திக்..திக்... உயிரை பணயம் வைத்த பயணிகள்... ஏர் இந்தியா விமானத்தில் அடுத்த சம்பவம்...!
இதனால் அந்த விமானத்தின் செயல்பாட்டை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தினர். பழுதடைந்த விமானம் என தெரியாமல் வந்த பயணிகள் சென்னையில் பத்திரமாக தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமானம் என்றாலே அடுத்தடுத்து ஏதாவது அசம்பாவிதம் அல்லது தொழில்நுட்ப கோளாறுகளால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இன்று பறவை மோதியதால் பழுதான விமானத்தில் பயணிகளின் உயிரை பணயம் வைத்து பயணிக்க வைத்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கையின் தலைநகரான கொழும்புவிற்கு 147 பயணிகள் உட்பட 153 பேருடன் ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டுள்ளது. அந்த விமானமானது கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக பொறியாளர்களை அழைத்துள்ளனர். விமானத்தில் சிக்கிய பறவையின் உடலை அப்புறப்படுத்திய பொறியாளர்கள் அதனை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். அப்போது முதற்கட்ட ஆய்வின் படி விமானத்தில் எந்த பாதிப்பும் இல்லை என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் பெரும் குழப்பம்... 152 பயணிகளுடன் நடுவானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்... நடந்தது என்ன?
இதனையடுத்து மீண்டும் அதிகாலை 3.20 மணி அளவில் ஏர் இந்தியா விமானமானது சென்னை நோக்கி புறப்பட்டுள்ளது. 147 பயணிகளுடன் கொழும்புவில் இருந்து சென்னை வந்தடைந்த விமானத்தை ஆய்வு செய்த போது, விமானத்தில் ஃபேன் பிளேடில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த விமானத்தின் செயல்பாட்டை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தினர். பழுதடைந்த விமானம் என தெரியாமல் வந்த பயணிகள் சென்னையில் பத்திரமாக தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தண்டவாளம் குண்டு வைத்து தகர்ப்பு! தடம் புரண்ட ரயில் பெட்டிகள்! பாகிஸ்தானில் கோரம்!