×
 

சென்னை விமான நிலையத்தில் பெரும் குழப்பம்... 152 பயணிகளுடன் நடுவானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்... நடந்தது என்ன?

சென்னை விமானம் பெங்களூருவில் தரை இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 12ம் தேதி அன்று, அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 (AI171) விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவ விடுதி கட்டடத்தில் மோதியது. இதில் 265 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தை அடுத்து, ஏர் இந்தியா விமானத்தில் அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவது, தாமதமான தரையிறக்கம் மற்றும் புறப்பாடு, நடுவானில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் குறித்த செய்திகள் அடிக்கடி  வெளியாகி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. 

இந்நிலையில் நேற்றிரவு சென்னையில் தரையிறங்க வேண்டிய ஏர் இந்தியா விமானம் பெங்களூருவில் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நேற்று மாலை 5.55 மணிக்கு 152 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் டெல்லியில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானமானது 8.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்த போது தரையிறங்க அனுமதி தரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த அந்த விமானத்தை, அதிகாரிகள் பெங்களூருவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானமானது, பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனால் நேற்றிரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டிய பணிகள் காத்துக்கொண்டிருந்தனர். பெங்களூரில் தரை இறங்கிய விமானம் நள்ளிரவில் சென்னை வந்தடைந்தது. இதனால் ஏற்பட்ட நீண்ட காலதாமதத்தால் டெல்லி சென்ற வேண்டிய பயணிகளும், சென்னை வந்து சேர வேண்டிய பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து இந்த விமான நிலை அதிகாரிகள் கேட்டபோது அவர்கள் முறையான எந்தவித விளக்கமும் தரவில்லை எனக்கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: அதிகாலையிலேயே பரபரப்பு... விமானத்திற்குள்ளேயே சிக்கித் தவித்த 180 பயணிகள் - தற்போதைய நிலை என்ன?

இதையும் படிங்க: டிடிவி தினகரனை சந்தித்தது உண்மையா? - சஸ்பென்ஸை உடைத்த செங்கோட்டையன்....!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share