×
 

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... சென்னையில் காவல்துறை அதிரடி ஆக்‌ஷன்...!

இனி சாலையில் போக்குவரத்து காவலர்கள் இல்லாவிட்டாலும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு தானாகவே அபராத தொகை வசூலிக்கப்படும். 

விபத்து, விபத்து உயிரிழப்புகளை குறைக்கவும், விரைவான போக்குவரத்தை உறுதி செய்யவும் போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விதி மீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. முதலில் சாலை சந்திப்புகளில் நின்றவாறு அபராதம் விதித்து வந்த போக்குவரத்து போலீஸார் தற்போது ஆங்காங்கே நவீன கேமராக்களை நிறுவி அதில் பதிவாகும் காட்சிகள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு அபராதம் விதிக்கின்றனர். அபராதம் தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் செல்போனுக்கே குறுந் தகவல்களாக அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை மற்றும் திருச்சி போன்ற நகரங்களில், தானியங்கி நம்பர் பிளேட் ரீடபள் கேமராக்கள் (ANPR) பொருத்தப்பட்டு, விதிமீறல்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகின்றன. ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் (ANPR) கேமராக்கள், அதிவேகமாக செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைப் படம் பிடித்து, விதிமீறல்களைக் கண்டறிய உதவுகின்றன. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவாகும் காட்சிகளை வைத்து, களத்தில் உள்ள போக்குவரத்து போலீசாரும் அபராதம் விதிக்கலாம். இந்த கேமராக்கள் மூலம் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில், கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதிக்கப்படுகிறது. தலைக்கவசம் அணியாமல் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது, அதிக வேகம் போன்ற போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. 

இந்த அபராதங்கள் மூலம், சாலை விதிகளை பின்பற்ற ஊக்குவிப்பதன் மூலம், சாலை விபத்துகளை குறைக்க முடிவதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடிய அதிநவீன கேமராக்கள் சென்னை மற்றும் திருச்சி போன்ற நகரங்களில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: இது நமக்குத் தேவையா? - வாயை விட்டு வசமாக சிக்கிய கனிமொழி... வச்சி செய்த டெல்லி...!

சென்னையில் மேலும் பல முக்கிய சாலைகளில் விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு துரிதமாக அபராதம் விதிக்கும் வகையில் அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சென்னையில் அண்ணாசாலை, அண்ணாநகர், ஸ்டான்லி மருத்துவமனை, ஈவேரா சாலை ஆகிய பகுதிகளில் ஏஎன்பிஆர் எனப்படும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுத்து அதன் வாயிலாக சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு ஈச்சலான் மூலமாக அபராதம் அனுப்பப்பட்டு வசூலிக்கப்படும். இந்த அதிநவீன கேமராக்கள் தற்போது அசோக் பில்லர், ராயப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட மேலும் ஒன்பது இடங்களில் பொருத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

அடுத்த இரண்டு மாதங்களில் மற்ற முக்கிய சாலைகளிலும் ஏஎன்பிஆர் கேமராக்களை பொறுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் இனி சாலையில் போக்குவரத்து காவலர்கள் இல்லாவிட்டாலும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு தானாகவே அபராத தொகை வசூலிக்கப்படும். 

இதையும் படிங்க: அதிகாலையிலேயே அதிர்ச்சி... திடீரென பற்றி எரிந்த அரசு பேருந்து...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share