அதிகாலையிலேயே அதிர்ச்சி... திடீரென பற்றி எரிந்த அரசு பேருந்து...!
உளுந்தூர்பேட்டையில் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் 35க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் பயன்பாடு இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30 மேற்பட்ட பேருந்துகள் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து கடலூருக்கு இயக்கப்பட இருந்த அரசு பேருந்து இன்ஜின் பகுதியில் திடீரென தீப்பொறி ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து தீ வேகமாக பரவி இன்ஜின் பகுதியில் தீப்பிடித்ததால் இதனை பார்த்த ஊழியர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் தீயை தடுக்கும் வகையில் நுரைக்கலைவையை பயன்படுத்தி பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பணிமனை வளாகத்தில் வேறு எந்த பகுதியிலும் தீ பரவவில்லை. இந்த தீ விபத்து சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து கழக பணிமனையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆகம விதி மீறலா?... வாட்ஸ் அப்பில் வட்டமடிக்கும் வீடியோவால் பரபரப்பு...!
இதையும் படிங்க: முதல்வர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்த சீமான்... பின்னணி குறித்து வெளியான 2 பரபரப்பு காரணங்கள்...!