×
 

பள்ளத்தில் விழுந்து பெண் பலியான விவகாரம்... சென்னையை அதிரவிட்ட சம்பவத்தில் போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்...!

சென்னை அண்ணாநகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில், மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர் மற்றும் மின்வாரிய ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை பாடி புதுநகர் பகுதியைச் சேர்ந்த கலாவதி என்ற பெண், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அண்ணாநகர் பகுதியில், அண்ணாநகர் டவர் மெட்டா அருகே மழைநீர் வடிகால் பள்ளம் மழைநீரால் மூடப்பட்டிருந்த நிலையில், அதில் தடுமாறி விழுந்து கலாவதி உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் அவர் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், மின் அதிர்ச்சி ஏற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட மின் கசிவால் அவர் பள்ளத்தில் விழுந்ததாகத் தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: திருச்சிதாங்க பெஸ்ட்! தூய்மையான காற்று நகரங்கள் ரேங்கிங்! சென்னையை பின்னுக்கு தள்ளி அசத்தல்! தமிழகத்துக்கு பெருமை!

இதையடுத்து, சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அண்ணாநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாநகராட்சி மற்றும் மின்வாரிய உதவி பொறியாளர்களையும் நேரில் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் அடிப்படையில், அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக கலாவதி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, மின்வாரிய ஒப்பந்ததாரர் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அலட்சியமாக செயல்பட்டு மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாவதிதான் தனது குடும்பத்தை காப்பாற்றி வந்ததாகவும், அவரது உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது மகள் சங்கீதா உள்ளிட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், போலீசார் தற்போது வழக்கில் பிரிவுகளை மாற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆபத்தான கட்டடங்கள் இடிக்கப்படும்... மாநகராட்சி ஆணையர் சமீரன் திட்டவட்டம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share