×
 

ரூ.16 ஆயிரம் கோடி... தமிழகத்தில் முதல் எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் வின் பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்து உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.

தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் வின் பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்து உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி சில்லா நத்தம் சிப்காட் வளாகத்தில் வின் பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி நிறுவனம் சுமார் 16, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிட்டில் அமைக்கப்பட்டுள்ளது இந்த மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து முதல் கார் விற்பனையை தொடங்கி வைக்கிறார் 

இதைத் தொடர்ந்து  தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம் மஹாலில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் மேலும் பல்வேறு புதிய தொழில் முதலீட்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்த மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது 

இதையும் படிங்க: சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக... திமுகவிற்கு தாவ தயாராகும் அடுத்த முக்கிய புள்ளிகள்...?

 தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருவதை முன்னிட்டு தூத்துக்குடியில் எங்கு திரும்பினாலும் இருவண்ண  திமுக கொடிகளாக காட்சி தருகிறது மேலும் வரவேற்பு பதாகைகளும் ஆங்காங்கே உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன 

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருவதை ஒட்டி காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த நிலையில் விழா நடைபெறும் இரண்டு பகுதிகளையும், விழா ஏற்பாடு குறித்து அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு செய்தார்
 

இதையும் படிங்க: 26 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை! குடை கொண்டு போங்க மக்களே...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share