ராகுல் பேசட்டும்... கூட்டணியை உடைக்கத் தயார்... காவிரி விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்..!!
மேகதாது குறித்து ராகுல் காந்தி ஒரு வார்த்தை பேசினால் என் டி ஏ கூட்டணியை விட்டு வெளியேறத் தயார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான நீண்டகால பிரச்னையில் முக்கிய திருப்பமாக, தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை பெங்களூரில் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை அமைச்சர் வினோத் உறுதிப்படுத்தியுள்ளார். மேகதாது அணைத் திட்டம் உள்ளிட்ட காவிரி தொடர்பான விவகாரங்களை இரு முதல்வர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்க உள்ளனர்.
இந்த சந்திப்பு இரு மாநிலங்களுக்கும் இடையிலான நீர் பங்கீடு பிரச்னையில் புதிய உரையாடலுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் கர்நாடக பயணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவிற்கு முதல்வர் விஜய் செல்லக்கூடாது என்றும் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேகதாது அணை விவகாரம் குறித்து பேசுவதற்கு தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது தேவையற்றது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தமிழக அரசு மத்திய அரசிற்கு தான் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் சூழ்ச்சி வலையில் தமிழக முதலமைச்சர் விழுந்து விடக்கூடாது என்றும் அன்புமணி எச்சரித்துள்ளார். மேகதாதவில் அணை கட்டுவதை தமிழக அரசு ஏற்காத நிலையில் எதற்கு பேச்சுவார்த்தை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகாவை நம்புறது WASTE..! அனைத்து கட்சி கூட்டம்..! தமிழக அரசுக்கு திருமா. கோரிக்கை..!!
தமிழகம் வரும் ராகுல் காந்தி மேகதாது வேண்டாம் என்று பேசுவாரா என அன்புமணி கேள்வி எழுப்பினார். மேலும் பாஜகவும் காங்கிரஸும் இணைந்து தமிழகத்திற்கு எதிராக சதி செய்கிறது என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மேகதாது குறித்து பேசினால் NDA- விலிருந்து வெளியேறத் தயார் என்றும் சவால் விட்டார். ஒரே ஒரு வார்த்தை தமிழகத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி பேசுவாரா என்றும் கேட்டிருக்கிறார். முதலமைச்சர் விஜய் தவறாக வழிநடத்துவது யார் என்றும் கேட்டார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!