×
 

கும்மிடிப்பூண்டி கொடூரம் எதிரொலி..! வெடிக்கும் பிரச்சனை... போராட்டக்காரர்கள் கைது!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதாகினார்.

கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் குடியிருந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுமி நேற்று மாலை திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும், அப்பகுதி மக்களும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, இயற்கை உபாதைக்காக சென்ற சில பெண்கள் அருகிலிருந்த புதர்ப் பகுதியில் காயங்களுடன் கிடந்த சிறுமியை கண்டுபிடித்தனர். உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் சிறுமியை ஒரே அறையில் இருந்த வட மாநில இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பிபின் மஞ்சி என்பவரை கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய சிறுமி மரணம்... "CM எதுக்குங்க சார்?" திமுக ஆவேசம்!

இந்த நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து ஏராளமான ஒரு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்யும் முயன்றும் போராட்டம் கைவிடப்படாத நிலையில் போராடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். போராடிய மக்களை கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றனர். 

இதையும் படிங்க: விவசாயி வீட்டிற்குள் புகுந்து துணிகரம்... 60 சவரன் நகைகள், 5 லட்சம் ரொக்கத்தை சுருட்டிய முகமூடி கொள்ளையர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share