தமிழகத்தை உலுக்கிய சிறுமி மரணம்... "CM எதுக்குங்க சார்?" திமுக ஆவேசம்!
கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் திமுக கடுமையாக விமர்சித்து உள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் குடியிருந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுமி நேற்று மாலை திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும், அப்பகுதி மக்களும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இயற்கை உபாதைக்காக சென்ற சில பெண்கள் அருகிலிருந்த புதர்ப் பகுதியில் காயங்களுடன் கிடந்த சிறுமியை கண்டுபிடித்தனர். உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் சிறுமியை ஒரே அறையில் இருந்த வட மாநில இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பிபின் மஞ்சி என்பவரை கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை திமுக கடுமையாக சாடியுள்ளது. சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடுமை யாராலும் மறக்க முடியாதது என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திமுக பலமிழந்து விட்டது! இதுதான் சரியான நேரம்! நிர்வாகிகளுக்கு சீக்ரெட் டாஸ்க் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
அந்த வேதனை ஆறுவதற்குள் 3 வயது சிறுமியும் 7 வயது சிறுமியும் மிக கொடுரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் 3 வயது குழந்தை முதல் சென்னையில் 61 வயதான மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைதான் இந்த Dummy Cm ஆட்சியில் என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கும் - பெண்களின் பாதுகாப்பும் அவ்வளவு சீரழிந்து கிடக்கிறது என்றும் முதலமைச்சராக இருக்கும் அவரோ எதற்கும் பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார் வெட்கங்கெட்டு என்றும் சாடியது. “நீங்க எதுக்குங்க சார்? உங்க ஆட்சி எதுக்குங்க சார்? உங்களுக்கு சி.எம்.பதவி எதுக்குங்க சார்? நீங்க எல்லாம் மனுச ஜென்மம் தானா?” இன்று கடுமையாக திமுக சாடியது.
இதையும் படிங்க: PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!