×
 

சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமான  திருவண்ணாமலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் பக்தர்கள் இம்மலையை வலம்  வருதலை கடைபிடிக்கின்றனர். திருவண்ணாமலையை வலம் வருதல் 'கிரிவலம்' என்று அழைக்கப்படுகிறது.

மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்கள்,வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வந்து வழிபாடு செய்கின்றனர்.

அதிலும் குறிப்பாக வரும் சித்ரா பௌர்ணமியில் கிரிவலம் சென்றால் ஒருவருடம் கிரிவலம் சென்ற பலன் கிடைப்பதாக ஐதீகம். அதனால் இந்த நாளில் பலரும் திருவண்ணாமலைக்கு படையெடுப்பார்கள். சித்ரா பௌர்ணமி கிரிவலம் ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 09 :52 மணிக்கு தொடங்கி மே 1 வெள்ளிக்கிழமை இரவு 11:0 8 மணி வரை செய்ய உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, நிலவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் காட்பாடி இடையே சிறப்பு ரயில்கள்இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பகல் நேர ரயில்கள்: 

1. விழுப்புரம் - திருவண்ணாமலை (வண்டி எண் 06130) - விழுப்புரத்தில் இருந்து ஏப்ரல் 30, மே1,2 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்குப் புறப்பட்டு, முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை அடையும்.

திருவண்ணாமலை - விழுப்புரம் (வண்டி எண் 06129) - ஏப்ரல் 30, மே 1, 2 தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.15 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 1.45 மணிக்கு விழுப்புரம் அடையும்.

நிறுத்தங்கள்: வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை.

 இரவு நேர ரயில்கள்: 

2. விழுப்புரம் - காட்பாடி (வண்டி எண் 06099) -  ஏப் 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இரவு 10.40 மணிக்குப் புறப்பட்டு, நள்ளிரவு 1.50 மணிக்கு காட்பாடி அடையும். 

காட்பாடி - விழுப்புரம் (வண்டி எண் 06100)  -  மே 1, 2, 3 ஆகிய தேதிகளில் காட்பாடியில் இருந்து நள்ளிரவு 2.05 மணிக்குப் புறப்பட்டு, அதிகாலை 5.00 மணிக்கு விழுப்புரம் அடையும். 

நிறுத்தங்கள்: திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி ரோடு, வேலூர் கண்டோன்மென்ட்.

இரவு நேர கூடுதல் ரயில்: 

3. விழுப்புரம் - திருவண்ணாமலை (வண்டி எண் 06145) - ஏப் 30, மே 1, 2 விழுப்புரத்தில் இருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை அடையும். 

திருவண்ணாமலை - விழுப்புரம் (வண்டி எண் 06146) - மே 1, 2, 3 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து நள்ளிரவு 2.00 மணிக்குப் புறப்பட்டு, அதிகாலை 4.00 மணிக்கு விழுப்புரம் அடையும். என தெற்கு ரயில்வே அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share