தேவாலயத்திற்குள் புகுந்து ரத்த வெறியாட்டம்... துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் பலி - நடந்தது என்ன?
காங்கோ நாட்டின் தேவாலயத்தில் இரவு பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்கு காங்கோவின் கொமாண்டா பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் இரவு திருப்பலியில் பங்கேற்றிருந்தனர். அப்போது அதிகாலை ஒரு மணி அளவில் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தேவாலயத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பலர் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து சுருண்டு விழுந்தனர். பலர் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவர்களை துரத்திச் சென்று கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இந்த ரத்த வெறிபிடித்த கொடூர தாக்குதலில் சுமார் 21 பேர் வரை கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது. பின்னர் 38 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. பலர் காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் பலர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனிடையே தேவாலயத்திற்கு அருகே இருந்த சில வீடுகள் மற்றும் கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பு கொண்டு ஏடிஎப் கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளதாகவும் அவர்கள் தொடர்ந்து இவ்வாறு பொதுமக்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் அரசு ஆதரவு பெற்ற மத அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எடுந்துள்ளார். தாக்குதலில் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் குமாண்டாவிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கோட்டையிலிருந்து வந்ததாகவும் பாதுகாப்பு படையினர் வருவதற்கு முன்பே தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
கிழக்கு காங்கோ சமீபத்திய ஆண்டுகளில் ஏடிஎப் மற்றும் ருகாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட ஆயுத குழுக்களால் கொடிய தாக்குதல்களை சந்தித்து வருகிறது. இஸ்லாமிய அரசுடன் உறவுகளை கொண்ட ஏடிஎப் உகாண்டா மற்றும் காங்கோ இடையான எல்லை பகுதியில் செயல்படுகிறது. பெரும்பாலும் இவர்கள் பொதுமக்களை குறிவைத்தே படுகொலைகளை அரங்கேற்றுகின்றனர். இம்மாத தொடக்கத்தில் இட்டூரி பகுதியில் இதே போன்று ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1990 களின் பிற்பகுதியில் உகாண்டாவில் ஜனாதிபதி யோவேரி முசைவேணி மீதான அதிருப்தியை தொடர்ந்து அங்கு பல்வேறு சிறு குழுக்களால் ஏடிஎப் உருவாக்கப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: அமைச்சர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு.. நூலிழையில் தப்பிய அதிர்ச்சி சம்பவம்..!
2002 ஆம் ஆண்டு உகாண்டா படைகளின் ராணுவ தாக்குதல்களை தொடர்ந்து அந்த குழு அதன் நடவடிக்கைகளை அண்டை நாடான காங்கோவிற்கு மாற்றியது. அதன் பின்னர் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கொலைகளுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 19ஆம் ஆண்டில் அது இஸ்லாமிய அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்தது. காங்கோ ராணுவம் நீண்ட காலமாக அந்த குழுவை கட்டுப்படுத்த போராடி வருகிறது. இந்த ரத்தவெறிபிடித்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!