×
 

#BREAKING: அமைச்சர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு.. நூலிழையில் தப்பிய அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லியில் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீக்கிய சமூகத்தின் நலனுக்காகவும், பஞ்சாபி உரிமைகளுக்காகவும் பணியாற்றியவராக அறியப்படுபவர் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா. அவர் டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழுவில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அவரது அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பொது வெளியில் அவர் ஆற்றிய பணிகள் பேசுபொருளாக மாறியது. பாரதிய ஜனதா கட்சியை இவர், சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். முன்னதாக, அவர் சிரோமணி அகாலி தளம் கட்சியில் இருந்த அவர், பாஜகவில் இணைந்தவர்.

இந்த நிலையில், டெல்லியில் சட்டவிரோத ஆலையை சீல் வைப்பதற்காக அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா சென்றதாக தெரிகிறது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதில் அதிர்ஷ்டவசமாக அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா உயிர்த்தப்பினார். விஷ்ணு கார்டன் பகுதியில் சட்டவிரோத தொழிற்சாலைக்கு சீல் வைக்க சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  தொழிற்சாலைக்கு சில வைக்க அதிகாரிகளுடன் சென்ற அமைச்சரை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பாமக நிர்வாகி சுட்டுக்கொலை! அன்புமணி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share