சிகரெட் சூடு, மூளையில் ரத்தக்கசிவு..! நரக வேதனையை அனுபவித்த அஜித்குமார்.. அம்பலப்படுத்திய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்..!
சிகரெட் சூடு, மூளையில் ரத்தக்கசிவு, 50 வெளிப்புற காயங்கள், அஜித் உடலில் இருந்ததாக, திடுக்கிடும் தகவல்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ளன.
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் போலீஸ் கஸ்டடியில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பதைபதைக்க வைத்துள்ளது.திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்ற பெண் கொடுத்த திருட்டு புகாரின் பேரில் அஜித் குமாரை விசாரித்த க்ரைம் டீம் போலீசார், அவரை கொடூரமாக அடித்து துன்புறுத்தினர். இதில் தான் அவர் மரணம் அடைந்தார்.
லாக்அப் டெத்துக்கு காரணமாக இருந்த போலீசார் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அஜித்குமார் திருடவில்லை. அவன் அப்பாவி என்று பல தரப்பினரும் சொல்லி வருகின்றனர். இதற்கிடையே புகார் கொடுத்த நிகிதாவின் பின்னணி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு உள்ளது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நிகிதாவுக்கு எதிராக கொடுத்த பேட்டி திருப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அடுத்தடுத்து வெளியாகும் போலீஸ் அறிக்கைகளை காணும் போது அதிர்ச்சி தருகிறது.
இதையும் படிங்க: பொள்ளாச்சி அருகே வசமாக சிக்கிய நிகிதா! ரவுண்டு கட்டிய மக்கள்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்!
தற்போது வெளியான அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை திடுக்கிட வைக்கிறது. அஜித்குமாரின் உடலில், 50 வெளிப்புற காயங்கள் இருந்தன. இதில், 12 சிராய்ப்பு காயங்கள், மீதி ரத்தக்கட்டு காயங்களாக இருந்துள்ளன. ரத்தம் கன்றிய காயங்கள் ஒவ்வொன்றும் ஒரு காயமாக இருந்தாலும், அந்த காயத்தினுள்ளே பல்வேறு ரத்தக்கட்டு காயங்கள் அடங்கியுள்ளன.
வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயம் இருந்துள்ளது. மண்டையோட்டில் அடியும், மூளையில் ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட புண் இருந்தது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் அடித்ததால், ரத்த காயம் பல வகையாக காணப்படுகிறது. தரையில் இழுத்துச்சென்றதால் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. போலீசார் அடிக்கும் போது தற்காத்துக் கொள்ள போராடி இருந்ததாலும் சிராய்ப்புகள் ஏற்பட்டு இருக்கலாம்.
தொடர்ந்து, பல மணி நேரம் கும்பலாக சேர்ந்து இந்த சித்ரவதையை நடத்தி இருக்கலாம் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலையில் அஜித்குமாரை கோயிலின் பின்புறத்தில் போலீசார் தாக்கும் வீடியோ இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக பார்க்கப்படுகிறது.
அந்த வீடியோவை எடுத்த கோயில் ஊழியர் சக்தீஸ்வரன், தமக்கும், தம்மை சார்ந்தவர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்று டிஜிபிக்கு கோரிக்கை வைத்தார். அதை ஏற்று, அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
போலீசார் அடித்ததில் அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பாக, 6 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐஜிக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: நிகிதாவுக்கும் திமுக தலைவர்களுக்கும் தொடர்பு? கொளுத்திப்போட்ட நயினார்.. சிக்கலில் ஸ்டாலின்!!