×
 

பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

தவெக வேட்பாளர் திமுகவை பற்றி தரக்குறைவாக பேச்சியதால் இருதரப்பினர் இடையே கைகலப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்கு  உட்பட்ட சில பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் செய்த போது தவெக வேட்பாளர் திமுகவை  ஒருமையில் பேசியதால்  திமுகவினருக்கும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கும் மோதலால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தவெக வேட்பாளர்  மற்றும் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது 

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் தவெக  வேட்பாளர் உதயகுமார்  நிர்வாகிகளுடன் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து  வந்து  உள்ளனர். ‌அப்போது வந்தவாசி அரசு மருத்துவமனை அருகில்  தவெக வேட்பாளர் உதயகுமார் தேர்தல்  பரப்புரை செய்தார்.

அப்போது  தவெக வேட்பாளர் உதயகுமார் திமுகவை  கடுமையாக விமர்சித்துள்ளனர். அப்போது திமுக நிர்வாகிகளுக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் தவெக வேட்பாளரின் பிரச்சார வாகனத்தில் இருந்த பேனர்களை கிழித்தனர்.

இதையும் படிங்க: விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தவெக வேட்பாளர்  உதயகுமார் மற்றும் தொண்டர்கள் அரசு மருத்துவ மனை அருகில்  திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர் .

    இதனால் வந்தவாசி -  மேல்மருவத்தூர் சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட தவெக வேட்பாளரிடம் சமரசம் பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் தவெக, திமுக கட்சியினர் தாக்கி கொண்டதில் 3 திமுகவினர்,1 தவெகவினர் ஆகிய நான்கு  பேர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டனர்.

    இது சம்பந்தமாக 100க்கு மேற்பட்டவர்கள் தவெக கட்சியினர், திமுக கட்சியினர் வந்தவாசி காவல் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் காவல் நிலையம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

   பின்னர் தவெக கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். பிறகு திமுக கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இரண்டு  கட்சியை சேர்ந்த 100க்கு மேற்பட்டவர்கள் காவல்  நிலையம் முன்பு திரண்டு மாறி மாறி இரு கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த சம்பவம் வந்தவாசி பகுதியில்  2 மணிநேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெரம்பூரில் வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிக்க விஜய் திட்டம்..! திருச்சி கிழக்கிலும் அனுமதி கேட்டு விண்ணப்பம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share