இஸ்லாமியர்கள், போலீசார் இடையே கடும் தள்ளுமுள்ளு.. கோவையில் பரபரப்பு...!
மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம், காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு.
வக்பு வாரியத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் கபரஸ்தானை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்..காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை பகுதியில் உள்ள காளம்பாளையம் என்னுமிடத்தில் புஜங்கனூர் வக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக கூறப்படும் ஆஷுர்கானா பள்ளி வாசல் மற்றும் கபரஸ்தான் உள்ளது.
பல ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் பயன்பாட்டில் உள்ள இந்த இடம் ஆக்கிரமிப்பு பகுதி என சிலர் வழக்கு தொடுத்து தொழுகை நடத்தவும் உடல் நல்லடக்கம் செய்யவும் இடையூறு செய்து வருவதாக புகார் தெரிவித்து தங்களுக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர வலியுறுத்தியும் தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் இன்று பிற்பகல் மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: சீமான் மீதான வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!
இதனையடுத்து காவல்துறை ஏடிஎஸ்பி தலைமையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு சிறுமுகை சாலை எல்.ஐ.சி அருகே தடுப்புகள் வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது..முற்றுகை போராட்டம் நடத்த வந்த முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் போராட்டக்கார்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது..கூட்டத்தில் சிலர் தடுப்புகளை தள்ளிவிட்டு வட்டாச்சியர் அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டனர்.
இதனையடுத்து வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த முந்நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார் அவர்களை வாகனங்கள் மூலம் அருகில் உள்ள தனியார் திருமண தங்க வைக்கப்பட்டுள்ளனர்..இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுங்கள்... கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு...!