×
 

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்... குழந்தைகளுடன் உணவருந்திய முதல்வர்கள்..!

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர். ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்

தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஒரு முன்னோடி முயற்சியாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று தொடங்கியது. இத்திட்டம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. முதற்கட்டமாக, மதுரை மாவட்டத்தில் 15 செப்டம்பர் 2022 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.

2023 ஆகஸ்ட் 25 அன்று, திருக்குவளையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார். இதன்படி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மேலும், 2024 ஜூலை 15 அன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கப்பட்டு, 2,23,536 மாணவர்கள் கூடுதலாக பயன்பெற்றனர்.

இதையும் படிங்க: குழந்தைகள் பசியை போக்கணும்! விரிவாக்கம் செய்யப்படும் முதல்வரின் காலை உணவு திட்டம்...

இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின், பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன்மூலம் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், குழந்தைகளுடன் அமர்ந்து முதல்வர்கள் உணவு அருந்தினர்.

இதையும் படிங்க: கனிமொழிக்கு "பெரியார் விருது"... அண்ணனிடம் ஆசி பெற்று மகிழ்ந்த தங்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share