×
 

தோழர்களுக்கு நேரில் நன்றி சொன்ன விஜய்! தியாக செம்மல் நல்லகண்ணு படத்திற்கு மலர் தூவி மரியாதை!

தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து விஜய் நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நாளை பதவியேற்க உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று மாலை தமக்கு ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்துத் தனது நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக, இடதுசாரித் தலைவர்களைச் சந்தித்த விஜய், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தியது அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரைச் சந்தித்துத் திரும்பிய கையோடு, விஜய் நேராக இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) கட்சி அலுவலகங்களுக்குச் சென்றார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான 'பாலன் இல்லத்திற்கு'ச் சென்ற விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த தியாகச் செம்மல் நல்லகண்ணு அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவித் தலைவணங்கி மரியாதை செலுத்தினார். தமிழக அரசியலின் நேர்மைக்கு அடையாளமாகத் திகழ்ந்த நல்லகண்ணுவிற்கு விஜய் செலுத்திய இந்த மரியாதை, அங்கிருந்த கம்யூனிஸ்ட் தொண்டர்களை நெகிழச் செய்தது.

சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன் மற்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்த விஜய், இக்கட்டான சூழலில் ஆளுநர் ஆட்சியைத் தவிர்க்கத் தமக்கு ஆதரவு அளித்ததற்காக இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: நாங்கள் இன்னும் NDA-வில்தான் இருக்கிறோம்! விஜய்க்கு ஆதரவு என்ற செய்தியை மறுத்தார் டி.டி.வி.தினகரன்!

முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பே, மூத்த தலைவர்களைத் தேடிச் சென்று ஆசி பெறுவதும், மறைந்த தியாகிகளுக்கு மரியாதை செய்வதும் விஜய்யின் புதிய அரசியல் கலாச்சாரத்தைக் காட்டுவதாகப் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இடதுசாரிகள் அமைச்சரவையில் பங்கேற்கப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து இச்சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

நாளை காலை 121 எம்.எல்.ஏ-க்களின் பலத்துடன் விஜய் அரியணை ஏறப்போகும் நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் அவர் பேணி வரும் இந்த இணக்கமான உறவு, ஒரு நிலையான ஆட்சிக்கான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கிண்டி நோக்கிப் பறக்கும் கார்! ஆளுநரை சந்திக்க பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்து புறப்பட்டார் விஜய்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share