கிண்டி நோக்கிப் பறக்கும் கார்! ஆளுநரை சந்திக்க பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்து புறப்பட்டார் விஜய்!
3வது முறையாக ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்.
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த ‘கிளைமாக்ஸ்’ காட்சி இதோ அரங்கேறத் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கான அனைத்து சட்டப்பூர்வ ஆதரவுகளையும் திரட்டியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சற்று நேரத்திற்கு முன்னால் தனது பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார்.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விதித்திருந்த 118 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதம் என்ற நிபந்தனையை விஜய் தற்போது பூர்த்தி செய்துள்ளார். தவெக (108), காங்கிரஸ் (5), இடதுசாரிகள் (4), மற்றும் விசிக (2) என மொத்தம் 118 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதங்களுடன் விஜய் ஆளுநரைச் சந்திக்கிறார். இன்று இரவு ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க முறைப்படி உரிமை கோருகிறார். ஆளுநர் திருப்தி அடையும் பட்சத்தில், இன்றே ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டு, நாளை காலை பதவிப்பிரமாண விழா நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
விஜய் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தமிழகத்தின் முதல்வரே! என முழக்கமிட்டு அவருக்கு உற்சாக வழியனுப்பு வைத்தனர். பட்டினப்பாக்கம் முதல் கிண்டி வரை தவெக தொண்டர்கள் சாலைகளின் இருபுறமும் குவிந்துள்ளதால், பாதுகாப்புப் பணிக்காகக் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: தமிழக முதல்வர் விஜய்..? கிரீன் சிக்னல் காட்டிய CPM..! முழு ஆதரவு..!
தமிழகத்தின் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றைத் தடம் மாற்றப் போகும் இந்தச் சந்திப்பு இன்னும் சில நிமிடங்களில் ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளது. ஆளுநர் மாளிகையிலிருந்து வரும் ஒவ்வொரு தகவலும் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகிறது.
இதையும் படிங்க: எதிரியும் எதிரியும் நண்பன்..? எப்படி..! தமிழ்நாடு ஏற்காது... ஜோதிமணி திட்டவட்டம்..!