#BREAKING விடிந்ததுமே அதிரடி... சர்வதேச போதை ஒழிப்பு நாளில் சி.எம். விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!
2026 சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் என 15 பேருக்கு பதக்கங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
போதை ஒழிப்பில் சிறந்து விளங்கிய காவல்துறையினருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2026 சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் என 15 பேருக்கு பதக்கங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
கடலூர் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா 2020ம் ஆண்டில் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூரில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய காலத்தில் போதைப்பொருள் ஒழிப்பில் தீவிரம் காட்டியதாகவும், இவரது வழிகாட்டுதல்களின் படி 903 கிலோ கஞ்சா, 575 கிராம் மெத்தபெட்டமைன், 74.5 கிராம் எம்.டி.எம்.ஏ., 55 கிராம் கொகைன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதோடு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 74 குற்றவாளிகளையும் கைது செய்துள்ளார். எனவே அவருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ், சென்னை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவில் லட்சுமணன், காவல் உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் திருச்சி மண்டல காவல் ஆய்வாளர் கண்ணன், கோவை மண்டல காவல் ஆய்வாளர் காமராஜ், தேனி குரங்கனி உதவி ஆய்வாளர் அருண், குமுளி தலைமைக் காவலர் ராஜ்குமார், கரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார், தேனி அலகு NIB தலைமைக் காவலர் ராமகிருஷ்ணன், நாகை வேட்டைக்காரனிருப்பு தலைமைக் காவலர் கார்த்திகேயன், திருப்பூர் நல்லூர் எஸ்.எஸ்.ஐ. ராமருக்கும் முதலமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!
மேலும் நெல்லை மதுவிலக்கு அமலாக்க பிரிவு தலைமை காவலர் ஐயப்பன், சென்னை அசோக்நகர் தலைமை காவலர் பிரேம்குமாருக்கும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் கையால் இந்த பதக்கங்கள் வழங்கப்படும்.
இதையும் படிங்க: இனி இரவு நேரங்களில்.. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு... ஹை அலர்ட்டில் காவல்துறை...!