கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் காவல்துறை விளக்கம் கொடுத்திருக்கிறது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் குடியிருந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுமி நேற்று மாலை திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும், அப்பகுதி மக்களும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இயற்கை உபாதைக்காக சென்ற சில பெண்கள் அருகிலிருந்த புதர்ப் பகுதியில் காயங்களுடன் கிடந்த சிறுமியை கண்டுபிடித்தனர். உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் சிறுமியை ஒரே அறையில் இருந்த வட மாநில இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பிபின் மஞ்சி என்பவரை கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: இனி இரவு நேரங்களில்.. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு... ஹை அலர்ட்டில் காவல்துறை...!
சிறுமிக்கு நேர்ந்தது கூட்டு பாலியல் வன்கொடுமை என்று தகவல்கள் பரவின. இந்த நிலையில் காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிகாரைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். சிறுமியும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: "ஐயோ போச்சே"..! மது பாட்டிலை உடைத்த போலீஸ்.? போலீஸ் ஸ்டேஷனில் உருண்டு குடிமகன் தர்ணா..!!