×
 

தமிழக மின் உற்பத்தியில் புதிய மைல்கல்! ரூ.13,077 கோடியில் உடன்குடி அனல் மின் நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர்!

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல் மின் நிலையத்தின் முதல் அலகை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழகத்தின் மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைக்கப்பட்டுள்ள உயர் அனல் மின் நிலையத்தின் (Udangudi Supercritical Thermal Power Project) முதல் அலகைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். சுமார் ₹13,077 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் மின் உற்பத்தித் திறன் கணிசமாக உயர உள்ளது.

இந்த அனல் மின் நிலையம் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளைக் கொண்டுள்ளது (மொத்தம் 1,320 மெகாவாட்). இதில் 660 மெகாவாட் திறன் கொண்ட முதல் அலகு இன்று முதல் தனது செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.

இது சூப்பர் கிரிட்டிக்கல் எனப்படும் அதி உய்ய நிலை வெப்பத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயல்படுகிறது. இது குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தி அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கணிசமாகக் குறைக்கும்.

இதையும் படிங்க: சமூக நீதி வென்றது! ஓபிசி கிரீமிலேயர் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்!

நிலக்கரியை இறக்குமதி செய்யக் கல்லாமொழி கடற்கரையிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் கடலுக்கு நடுவே பிரத்யேக நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கன்வேயர் பெல்ட்கள் மூலம் நிலக்கரி நேரடியாக மின் நிலையத்திற்குத் தானியங்கி முறையில் கொண்டு வரப்படும்.

வரும் கோடையில் தமிழகத்தின் மின் தேவை 22,000 மெகாவாட்டைத் தொடும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மின் நிலையத்தின் தொடக்கம் மின் விநியோகத்தைச் சீராக வைத்திருக்கப் பெரிதும் உதவும்.

இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதுடன், தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது அலகின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், அது வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share