தாயுமானவர் திட்டம்: இந்தியாவுக்கே முன் மாதிரி முயற்சி... ரேஷன் கடை ஊழியர்களுக்கு மு.க.ஸ்டாலின் வைத்த நேரடி கோரிக்கை...!
இன்று தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று முதல்வர் தாயுமானவர் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேலானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
வடசென்னை தண்டையார்பேட்டை கோபால் நகரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மொத்தமாக 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நம்ம திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்திட்டு இருக்கிறோம். அந்த வரிசையில என்னுடைய மனசுக்கு பிடிச்ச திட்டமா உருவாகி இருக்கிறது தான் தாயுமானவர் திட்டம். கூட்டுறவு துறை சார்பில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறநாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்குகிற தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி அரசோட சேவைகளை மக்களுடைய வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுக்கிறது இந்தியாவிக்கே முன்மாதிரி முயற்சி.
இந்த திட்டத்தில் 34,809 நியாய விலைக் கடைகளில் செயல்படுத்த போகிறோம். 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 முதியவர்கள், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகள் என்று மொத்தமாக 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாதம் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் குடிமை பொருள்கள் அவர்களின் வீடு தேடி சென்றுவிடும்.
இதையும் படிங்க: DMK ஜெயிக்கும்போது ஓட்டு மெஷின் சரியா இருந்துச்சா? தமிழிசை சரமாரி கேள்வி..!
இதுக்காக கூட்டுறவு துறைக்கு ஆகப்போற 30 கோடியே 16 லட்சம் ரூபாயை கூடுதல் செலவாக கருதாமல், மக்களுக்கு செய்கிற உயிர்காக்கும் கடமையாக நாங்க நினைக்கிறோம். இது கூட்டுறவு துறையோட மிகப்பெரிய சேவை அந்த துறை அதிகாரிகள் அலுவலர்கள், கடை விற்பனையாளர்கள் செய்யப்போகிற மிகப்பெரிய கடமை.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2,394 புதிய நியாய விலைக் கடைகளை திறந்திருக்கிறோம். இதனை சிறப்பாக நடத்துவதால் தான் தமிழ்நாடு பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. தலைவர் கலைஞர் வழியில் இந்த நியாயவிலை கடைகளை நாம் முறையாக சிறப்பாக நடத்தி வருவதால் தான், தமிழ்நாடு இன்னைக்கு பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக இருக்கு. இந்த ரேஷன் கடைகளோட பயன்பாட்டை இன்னும் எளிமையாக்க முயற்சிகள் எடுத்திருக்கிறோம். இந்த ரேஷன் கடைகளின் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம். ரேஷன் கடை ஊழியர்கள் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓட்டு திருடிதான் நீங்க ஜெய்ச்சீங்களா ராகுல்? பூந்து விளாசிய அண்ணாமலை!