×
 

முதல்வர் இன்று மயிலாடுதுறை பயணம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை பயணம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்வுகள் மற்றும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, திருச்சி மண்டல ஐ.ஜி. தலைமையில் 1,900 போலீஸார் பாதுகாப்பு பணிியில் ஈடுபட்டுள்ளனர். 

மயிலாடுதுறையில் நாளை (செவ்வாய்) மற்றும் நாளைமறுநாள் (புதன்கிழமை) நடைபெறவுள்ள திமுக கட்சி நிகழ்வுகள் மற்றும் அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக, சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக சிதம்பரம் வருகைதரும் முதல்வர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக செவ்வாய்க்கிழமை மதியம் மயிலாடுதுறை மாவட்டத்தை அடைகிறார். மதியம் 12.30 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பாலம் அருகே சோதியக்குடியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைத்த பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருவெண்காட்டில் அவரது இல்லத்தில் தங்குகிறார். பின்பு மாலை 5.00 மணிக்கு செம்பதனிருப்பு பகுதியில் கலைஞர் சிலையை திறந்து வைக்கிறார்.

அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறையில் பூம்புகார் சாலைமுதல் கச்சேரி சாலையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றம் வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று, புதுப்பிக்கப்பட்ட அண்ணா பகுத்தறிவு மன்றக் கட்டடத்தையும், அங்கு நிறுவப்பட்டுள்ள மு.கருணாநிதியின் முழுஉருவச் சிலையையும் திறந்துவைத்து, கட்சிக் கொடி ஏற்றுகிறார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்குகிறார்.

இதையும் படிங்க: ஊர் சேர்ந்தா தான் தேர் இழுக்க முடியும்! ஒற்றுமையோடு செயல்பட திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை!

மறுநாள் (புதன்கிழமை) அங்கிருந்து புறப்பட்டு வழுவூரில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் மு.கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைத்த பின்னர், மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, முடிவுற்ற பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சி முடிந்து பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை ரயில் நிலையம் சென்று மதியம் 1.10 மணிக்கு சோழன் விரைவு ரயில் மூலம் சென்னை புறப்படுகிறார். முதல்வரின் வருகையையொட்டி, மாவட்டம் முழுவதும் திருச்சி மண்டல ஐ.ஜி. தலைமையில் 1900 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கடன் வாங்குவதில் சூப்பர் CM... விலைவாசி பட்டியலை எடுத்து பாருங்களேன்! ஸ்டாலினை கிழித்தெடுத்த எடப்பாடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share