×
 

பச்சோந்திக்கே டஃப் கொடுக்கும் பழனிசாமி! வேலூர் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின்  விமர்சனம்!

பச்சோந்திக்கே டஃப் கொடுத்து கலர் மாறும் பழனிசாமி, பாஜகவை பிரிந்த மாதிரி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கபட நாடகம் போட்டார் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேலூரில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார்.

எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பேசிய முதலமைச்சர் பச்சோந்திக்கே டஃப் (Tough) கொடுத்துக் கலர் மாறும் பழக்கம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. பாஜகவுடன் உறவில் இருந்து கொண்டே, தேர்தலுக்காக அவர்களைப் பிரிந்தது போலக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒரு கபட நாடகம் போட்டார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) குறித்து அதிமுகவின் நிலைப்பாட்டைச் சாடிய அவர் மக்களுக்கு எதிரான CAA சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு, பின்னர் 'கூட்டணி தர்மத்தால்' ஆதரித்ததாக ஒரு புதுக்கதையைச் சொன்னார் பழனிசாமி. தமிழக மக்களின் நலனை விட பாஜகவுடனான கூட்டணி தர்மமே அவருக்குப் பெரிதாகத் தெரிந்தது.

இதையும் படிங்க: ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

பழனிசாமியின் அரசியல் நடிப்பு குறித்து ஸ்டாலின் கிண்டலாகப் பேசுகையில் பழனிசாமியின் இந்த நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்க முடியாது என்பதால், கடந்த தேர்தலில் மக்கள் அவருக்குப் பெரும் தோல்வியைப் பரிசாக அளித்தார்கள். இந்தத் தேர்தலிலும் அவரது நாடகங்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை" என முழங்கினார்.

திமுக அரசின் சாதனைகளான மகளிர் உரிமைத் தொகை மற்றும் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய முதலமைச்சர், பாசிச சக்திகளுக்கும் அவர்களின் நிழலாக இருக்கும் அதிமுகவிற்கும் இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வேலூர் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சரின் இந்த பச்சோந்தி மற்றும் கபட நாடகம் குறித்த விமர்சனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அதிமுக - திமுக இடையே நேரடி வார்த்தைப் போராக மாறியுள்ளது

இதையும் படிங்க: சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ! நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் வாக்கு சேகரிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share