இது மு.க.ஸ்டாலின் ப்ராமிஸ்! திருவள்ளுவர் தினத்தில் 4 வாக்குறுதிகள்! முதல்வர் முக்கிய அறிவிப்பு!
திருவள்ளுவர் தினத்தில் தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகளை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி (ஜனவரி 16) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்நாளில் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
“திருவள்ளுவர் நாள் என்றால் அது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; நமது சமூகத்தை மேலும் நல்லதொரு திசையில் கொண்டு செல்ல வேண்டிய நாள். அதனால் தான் இன்று தமிழக மக்களுக்கு நான் நான்கு திடமான வாக்குறுதிகளை அளிக்கிறேன்.”
இதையும் படிங்க: திருவள்ளுவர் திருநாள்! துரைமுருகன், இறையன்பு, யுகபாரதிக்கு விருது! முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்!
அந்த நான்கு வாக்குறுதிகள்:
- சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராக துணிச்சலுடன் தொடர்ந்து போராடுவது
- வறியோர், எளியோர் வாழ்வு உயர உதவும் மனிதநேயத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவது
- இளைஞர்களின் அறிவாற்றலை வளர்க்கும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்வது
- தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப்பூர்வமான பணிகளைத் தொடர்ந்து செய்வது
வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் #திருவள்ளுவர்_நாள்-இல், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்!#வெல்வோம்_ஒன்றாக! #ThiruvalluvarDay pic.twitter.com/AuPZ4ceNoc
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 16, 2026
“இந்த நான்கு வாக்குறுதிகளும் தமிழகத்தில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்பதை இந்தத் திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு உறுதியாகத் தெரிவிக்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
திருக்குறளின் அறநெறிகளை அடிப்படையாகக் கொண்டு, சமூகநீதி, சமத்துவம், மனிதநேயம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருவதை இந்த வாக்குறுதிகள் மீண்டும் உறுதிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
திருவள்ளுவர் தினத்தன்று மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், முதல்வரின் இந்த நான்கு வாக்குறுதிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: திருவள்ளுவர் திருநாள்! துரைமுருகன், இறையன்பு, யுகபாரதிக்கு விருது! முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்!