×
 

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2 ஆம் நாள் மாநாடு..! முதல்வர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனைகள்..!!

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உடனான இரண்டாவது நாள் மாநாடு முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்றன.

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் முதல் பெரிய அதிகாரிகள் மாநாடு இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மாநாட்டின் முதல் நாளில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, அரசு நலத்திட்டங்களின் செயல்பாடு போன்றவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. முதலமைச்சர் விஜய், பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்று தெளிவாக அறிவுறுத்தினார்.

மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த அதிகாரிகள் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மாவட்ட ஆட்சியர்கள் திங்கட்கிழமை தவிர மற்ற வேலை நாட்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டு மக்களின் குறைகளை நேரடியாக அறிந்து தீர்வு காண வேண்டும் என்றும், குடிநீர், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த முனைப்பு காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இரண்டாவது நாளான இன்று, மாநாடு மேலும் குறிப்பிட்ட துறைகளில் கவனம் செலுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நேர்ல போய் பாக்கமாட்டாரா..? CM விஜயை துரத்திய கேள்விகள்... ஒருவழியாக கரூர் செல்ல திட்டம்..!

குறிப்பாக, ஐஎஃப்எஸ் (இந்திய வனப்பணி) அதிகாரிகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள், வன வளங்கள் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர்களுடன் தனிப்பட்ட சந்திப்புகளும் தொடர்ந்துள்ளன.

அரசின் 28 முக்கிய துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலவரம், அவற்றை விரைவாக முடிக்கும் வழிமுறைகள், மக்கள் நலனை மையப்படுத்திய நிர்வாகம் ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இணைந்து சட்டம் ஒழுங்கு, கூட்ட நெரிசல் மேலாண்மை, திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளின் போது ஏற்படும் அசம்பாவிதங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றைப் பற்றியும் ஆலோசித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: அதானியின் அல்லேரி திட்டம்..! ஜவ்வாது மலையை விற்பதா..? வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share