மெகா டீல்... தமிழக வளர்ச்சிக்கு புதிய ஊக்கம்..! L&T-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!!
வேலைவாய்ப்பு திட்டங்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.
ரூ.18,600 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் லார்சன் & டூப்ரோ நிறுவனம் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொடர்ந்து முதலீடுகள் மேற்கொண்டு தொழில் துறையில் வலுவான தடம் பதித்துள்ளதையும், தமிழ்நாட்டில் பரவலாகவும், வெவ்வேறு துறைகளில் மேலும் 18,600 கோடி ரூபாய் முதலீட்டில் 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் அமைக்க முன்வந்துள்ளதையும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பாராட்டினார்.
மேலும், தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தகவல் தரவு மைய விரிவாக்கத் திட்டத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையும் படிங்க: இன்னும் நல்ல நேரம் வரலையா முதல்வரே..? சிங்கப்பெண் அதிரடிப்படை.... விளாசிய வானதி சீனிவாசன்..!!
கோயம்புத்தூரில் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் 2,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம். திருவள்ளூர் மாவட்டத்தில், 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் 5,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காட்டுப்பள்ளி L&T கப்பல் கட்டும்தளம் விரிவாக்கத் திட்டம் ஆகிய 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையும் படிங்க: REOPEN...! கல்வி ஆண்டின் முதல் நாள்...! முதல்வர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து..!